முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5-வது முறையாக சந்திராயனின் சுற்றுப்பாதை மாற்றி அமைப்பு - இஸ்ரோ தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஸ்ரீஹரிகோட்டா : சந்திராயன்-2 விண்கலம் நிலவை மேலும் நெருங்கும் வகையில் 5-வது முறையாக அதன் சுற்றுப்பாதையை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

சந்திரயான்-1 விண்கலத்தை கடந்த 2008 அக்டோபர் 22-ம் தேதி பி.எஸ்.எல்.வி-சி 11 ராக்கெட் மூலம் நிலவுக்கு இஸ்ரோ அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் உள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. இது நிலவில் நீர் இருப்பதையும் கண்டறிந்தது. மொத்தம் 312 நாட்கள் ஆய்வை மேற்கொண்ட இந்த விண்கலம் 2009 ஆகஸ்ட் மாதத்துடன் தனது ஆயுட்காலத்தை நிறைவு செய்தது. இந்நிலையில், இந்தியா மீண்டும் நிலவிற்கு சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டது. அதன்படி, சந்திரயான்-1 விண்கலம் நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்ததால் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டு அதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு வந்தது.

இத்திட்டத்திற்கான பணிகளை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்ரோ தொடங்கியது. இதற்கான திட்ட மதிப்பு ரூ.1,000 கோடி ஆகும். அதன்படி, 3 ஆயிரத்து 877 எடை கொண்ட சந்திரயான்-2 விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 எம்-1 ராக்கெட் மூலம் விண்ணில் அனுப்புவது என முடிவு செய்யப்பட்டு ஜூலை 15-ம் தேதி அனுப்பப்பட இருந்தது. ஆனால், ராக்கெட்டில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டறியப்பட்டதால் விண்ணில் ஏவுவது திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, திட்டமிட்டபடி 22-ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான் -2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்த சந்திரயான் -2 விண்கலமானது, ஆகஸ்ட் 14-ம் தேதி அன்று பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கி நேர்கோட்டில் பயணிக்கத் தொடங்கியது. ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளை கொண்ட இந்த விண்கலம், ஆகஸ்ட் 20-ல் நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்து நிலவைச் சுற்றி வருகிறது. அதற்கு பிறகு நிலவில் தரையிறங்குவதற்காக அதன் சுற்றுவட்டப் பாதையின் விட்டம் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று சந்திராயன் 2 விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதை 5-வது மற்றும் இறுதி முறையாக மாற்றியமைக்கப்பட்டது. இதன் மூலமாக நிலவின் தரைப்பகுதியை நெருங்கி வரும் சந்திரயான்-2 விண்கலமானது, வரும் செப்டம்பர் 7-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து