முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப வர எனக்கு அழுத்தம் ஏதும் இல்லை: முரளி விஜய்

ஞாயிற்றுக்கிழமை, 1 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

சென்னை  : இந்திய கிரிக்கெட் அணிக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்பதில் எனக்கு எந்தவித அழுத்தமும் இல்லை என முரளி விஜய் கூறினார்.

சென்னையில் நடை பெற்ற ஜூனியர் சூப்பர் கிங்ஸ் டி 20 தொடரின் கோப்பை அறிமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் முரளி விஜய் கூறுகையில், இந்திய அணிக்கு மறு பிரவேசம் செய்வதை நினைத்துக் கொண்டு எனக்கு நானே அழுத்தம் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. எந்த அணிக்காக விளையாடுகிறேனோ அந்த அணிக்கு பங்களிப்பு செய்வதில் கவனம் செலுத்த விரும்புகிறேன்.

பெருமைக்காகவே நான் கிரிக்கெட் விளையாடுகிறேன். அது எனது பேரார்வமும்கூட. இந்திய அணிக்காகவோ அல்லது உலக அளவில் விளையாடுவதையோ நான் எதிர்நோக்கவில்லை. எனது கவனம் உயர்மட்ட அளவிலான கிரிக்கெட் விளையாடுவதுதான். அதனால் எந்தவிதமான கிரிக்கெட் டாக இருந்தாலும் எனக்கு நல்லது தான். விளையாடும் அணிக்காக பங் களிப்பு செய்வதை எதிர்நோக்குவேன். எனது 15 வருட கிரிக்கெட் வாழ்க் கையில் இதை செய்துள்ளேன். எனவே வெளிப்படையாகவே அந்த அம்சத்தில் எதுவும் மாறாது. ஆனால் வாய்ப்புகள் அதிக அனுபவத்தை உருவாக்குகின்றன. அதில் ஒன்றை எதிர் நோக்குகிறேன். கிரிக்கெட் விளையாடும் எனது கனவு களுக்கு எந்தவிதமான வரம்புகளையும் வைக்கவில்லை. இதற்கு முன்னர் இந்திய அணிக்கு 4 முறை மறுபிரவேசம் செய்துள்ளேன். இதனால் அதில் எந்தவித அழுத்தமும் இல்லை. அதை எப்படி செய்வது என்று எனக்குத் தெரியும். நான் எந்த அணிக்காக விளையாடுகிறேனோ அதில் பங்களிக்க விரும்புகிறேன். அணியை வெற்றிபெறச் செய்ய விரும்புகிறேன் என்றார்.

35 வயதான முரளி விஜய் கடைசி யாக இந்திய அணிக்காக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடை பெற்ற டெஸ்ட் போட்டியில் களமி றங்கியிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுன்டி கிரிக்கெட் போட்டியில் சோமர்செட் அணி பங்கேற்கும் கடைசி 3 ஆட்டங்களில் முரளி விஜய் களமிறங்க உள்ளார்.  இந்த ஆட்டங்களில் அவர், சிறப்பாக செயல்படும் பட்சத்தில் அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள தென் ஆப் பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படு வதற்கான வாய்ப்புகள் உருவாகக் கூடும் என கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து