முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்பூஷன் விவகாரம் - தூதரக சந்திப்புக்கு பாக். அனுமதியை ஏற்றது இந்தியா

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      விழுப்புரம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : குல்பூஷன் ஜாதவுடனான தூதரக அளவிலான சந்திப்புக்கு பாகிஸ்தான் வழங்கிய அனுமதியை இந்தியா ஏற்றுக்கொண்டது. 

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ், உளவு பார்த்ததாக கூறி 2016ம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. இதையடுத்து குல்பூஷன் ஜாதவிற்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 2017, ஏப்ரலில் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து இந்தியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி உத்தரவிட்டது. சர்வதேச ஒப்பந்தங்களின்படி, குல்பூஷன் ஜாதவுக்கு அளிக்கப்பட வேண்டிய சட்டரீதியிலான உரிமைகளையும், தூதரக உதவிகளையும் காலதாமதமின்றி உடனடியாக அளிக்க வேண்டும் எனவும் பாகிஸ்தானுக்கு சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.

வியன்னா ஒப்பந்தங்களின்படி இந்திய தூதரக அதிகாரிகள் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அனுமதி அளிக்கப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது டுவிட்டரில் தெரிவித்தது.

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவுடனான தூதரக அளவிலான சந்திப்புக்கு பாகிஸ்தான் வழங்கிய அனுமதியை அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக்கு பின் இந்தியா  ஏற்றுக் கொண்டது. இதைத்தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி கவுரவ் அலுவாலியா, குல்பூஷன் ஜாதவை சந்திக்க உள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து