முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயண நேரத்தை குறைத்திட திருமங்கலம்-உசிலம்பட்டி இடையே எல்.எஸ்.எஸ் பேருந்துகளை இயக்கிட பொதுமக்கள் கோரிக்கை:

திங்கட்கிழமை, 2 செப்டம்பர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.-பயண நேரத்தை வெகுவாக குறைத்திடும் வகையில் திருமங்கலம்-உசிலம்பட்டி இடையே குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டுமே நின்று சென்றிடும் எல்.எஸ்.எஸ் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிக எண்ணிக்கையிலான பேருந்து நிறுத்தங்கள் இருப்பதாலும்,30.9கி.மீ தூரம் பயணிப்பதாலும்,கிராமங்கள் மத்தியில் அதிக வேகத்தடைகளை கடந்து செல்வதாலும் திருமங்கலம்-உசிலம்பட்டி இடையே பயணம் மேற்கொள்ள புறநகர் பேருந்துகளில் குறைந்த பட்சம் ஒன்றரை நேரம் ஆகிறது.அதே போல் நகரப் பேருந்துகள் பயணம் செய்வது நீண்ட நேரம் ஆகிறது.இதனால் காலை நேரங்களில் பள்ளிக்கு,அரசு அலுவலகங்களுக்கு மற்றும் இதர வேலைகளுக்கு செல்பவர்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.கியர் மாற்றுவதற்கு முன்பாகவே நிறுத்தங்கள் வந்து விடுவதால் பேருந்துகள் சரியான வேகத்தில் செல்ல முடியாமல் திணறுகின்றன.காலை,மாலை என இரு வேளைகளிலும் பொதுமக்களின் கட்டுக்கடங்காத கூட்டம் பேருந்துகளில் பயணிப்பதால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அனைத்து தரப்பினரும் திண்டாடி வருகின்றனர்.ஆனால் அதிநவீன வசதிகள் கொண்ட தனியார் பேருந்துகள் அரசுப் பேருந்துகளை விட விரைவாக செல்வதால் திருமங்கலம்-உசிலம்பட்டி மார்க்கத்தில் தனியார் பேருந்துகளில் காட்டில் அடைமழை பெய்து வருகிறது.
இந்த நிலையினை மாற்றிட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் காலை மாலை என இரு வேளைகளில் மட்டும் குறிப்பிட்ட சில நிறுத்தங்களில் மட்டும் நின்று சென்றிடும் சாதாரண கட்டணத்துடன் கூடிய எல்.எஸ்.எஸ் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என வேலைக்குச் செல்பவர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே திருமங்கலம்-உசிலம்பட்டி வழித்தடத்தில் காலதாமதத்தை குறைத்திடும் வகையிலும்,தனியார் பேருந்துகளின் போட்டியை சமாளித்திடும் வகையிலும் வேலைக்கு செல்பவர்களுக்கு உதவியாக எல்.எஸ்.எஸ் பேருந்துகளின் சேவையை அறிமுகம் செய்திட வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது…

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து