முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானாவில் ரூ.4,750 கோடி பயிர்கடன் வட்டி ரத்து - முதல்வர் மனோகர் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

சண்டிகர் : அரியானாவில் விவசாயிகள் வாங்கிய பயிர்கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை ரூ.4,750 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார். 

அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. மனோகர் லால் கட்டார் முதல்வராக உள்ளார். விரைவில் அரியானா சட்டசபை தேர்தல் நடைபெறும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், மாநிலத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து விவசாயிகள் வாங்கிய பயிர்கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை ரூ.4,750 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ விவசாயிகளின் நலன் கருதி பயிர் கடன்களுக்கான வட்டி மற்றும் அபராத தொகை ரூ.4,750 கோடி ரத்து செய்யப்படுகிறது. இந்த தொகையை ரூ.5,000 கோடி வரை உயர்த்துவதற்கு ஆலோசித்து வருகிறோம். இதன் மூலம் ஆரம்ப வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மாவட்ட கூட்டுறவு மத்திய வங்கிகள்  மற்றும் நில அடமான வங்கி  உள்ளிட்டவற்றில் இருந்து கடன் பெற்ற சுமார் 10 லட்சம் விவசாயிகள் பலன் பெறுவார்கள்” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து