முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3-வது இடத்திற்கு முன்னேறினார் பும்ரா

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

கிங்ஸ்டன் : ஐ.சி.சி. டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

யார்க்கர் என்றாலே சமீப கால கிரிக்கெட்டில் நினைவுக்கு வரும் பந்து வீச்சாளர் யார் என்றால் அது மலிங்காதான். அதன்பின் பும்ரா சிறந்த யார்க்கர் பந்து வீச்சாளராக உருவானார். ஒருநாள் மட்டும் டி -20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வந்த பும்ரா. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கேப்டவுனில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் ஆனார்.

அதன்பின் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடரில் விளையாடிய பும்ரா விக்கெட்டுக்களை அள்ளினார். பும்ராவால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்து வீச முடியுமா? என்று கேள்வி கேட்டவர்களுக்கு தனது பந்து வீச்சு மூலம் பதிலடி கொடுத்து வருகிறார்.  ஜமைக்கா டெஸ்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். தற்போது வரை 12 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி 62 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் 85-வது இடத்தில் இருந்து தனது டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கினார். தற்போது 21 மாதத்திற்குள் 12 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி 3-வது இடத்திற்கு முன்னேறினார். ஜமைக்கா டெஸ்டுக்கு முன் 7-வது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து