ஈரான் விண்வெளி மையத்திற்கு அமெரிக்கா பொருளாதார தடை

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      உலகம்
Iran space station 2019 09 04

சட்ட விரோதமாக அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக ஈரான் விண்வெளி மையத்திற்கு அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம்  செய்தது. ஆனால் கடந்த ஆண்டு இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா திடீரென விலகியது.  இதைத்தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அதற்கு பதிலடியாக, எண்ணெய் வர்த்தக போக்குவரத்து நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தியில் தடை ஏற்படுத்துவோம் ஈரான் மிரட்டியது. இதானல் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழ்நிலையே நிலவி வருகிறது.  கடந்த வியாழக்கிழமை ஈரான் விண்வெளி மையத்திலிருந்து ராக்கெட் ஒன்றை வெடித்தது.

இந்த சம்பவம் மற்ற நாடுகளுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இது குறித்து ஈரான் அதிகாரிகள் கூறுகையில், சோதனையின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் வெடித்தது என தெரிவித்தனர். 

இந்நிலையில், செயற்கைகோள் திட்டத்தின் கீழ் ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, ஈரான் விண்வெளி மையத்திற்கு அமெரிக்கா கருவூலத்துறை பொருளாதார தடைகளை விதித்துள்ளது.  இந்த பொருளாதாரத் தடைகள் மூலம், சர்வதேச நிறுவனங்கள் மற்றும் சர்வதேச விண்வெளி ஒத்துழைப்பு அமைப்புகள் உள்ளிட்ட அமைப்புகள் ஈரானிய விண்வெளி நிறுவனத்துடன் ஏதேனும் தொடர்பு கொண்டிருந்தால், அவர்கள் மீது குறிப்பிடத்தக்க அபராதங்களை டிரம்ப் நிர்வாகம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து