முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் மாநில எல்லையோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக எல்லையோர மலை மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வட மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக ஒடிசா, தெலுங்கானா, சத்தீஸ்கர், மற்றும் மத்திய பிரதேசத்தில் கன மழை தொடரும். மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கர்நாடகாவின் கடலோர பகுதிகளில் நாளை(இன்று) முதல் மூன்று நாட்களும் கன மழை நீடிக்கும். தென் மேற்கு பருவமழை ஏறக்குறைய நிறைவடையும் நிலையில், மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பரவலாக மழை பெய்து வருவதால், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரபிக் கடல் பகுதியில் இருந்து வரக்கூடிய காற்றும் வங்ககடலில் இருந்து வரக்கூடிய காற்றும் சென்னைக்கு அருகே ஒன்று சேர்வதாலும் தென் மேற்கு பருவக்காற்று காரணமாகவும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 சென்டி மீட்டர் மழையும், கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் பஜார் நடுவட்டம் ஆகிய இடங்களில் 6 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரி மாவட்டம்,கோதையாறு, சின்னக்கல்லாரில் 4 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவு நேரங்களில் காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மீனவர்கள் மத்திய வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்க கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அப்பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து