கீழடியில் மிக நீண்ட தரை தளம் கண்டறியப்பட்டுள்ளது.

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2019      சிவகங்கை
4 keladi

சிவகங்கை- கீழடியில் நடக்கும் அகழாய்வில் ஒரு மீட்டர் நீளமுள்ள சுடுமண் குழாய் கண்டெடுக்கப்பட்டது. இந்த குழியின் மிக அருகில் தரை தளம் கண்டறியப்பட்டுள்ளது. 10 மீட்டர் நீளமுள்ள இந்த தரை தளத்தின் அகலம் ஒரு மீட்டர் உள்ளது. தரை தளத்தின் இருபுறமும் நீளவாக்கில் ஒரு அடி உயரமுள்ள சுவரும் உள்ளது. தரை தளத்தில் உள்ள கற்கள் அனைத்தும் சுடப்பட்ட கற்களாக உள்ளன.கற்களின் மேற்புறம் பிடிமானத்திற்காக ஒவ்வொரு கற்களிலும் கோடுகள் வரையப்பட்டுள்ளதுடன் சிறிய துளை போன்ற அமைப்பும் காணப்படுகிறது. சுடுமண் குழாயின் அருகிலும் தரைதளம் போன்ற அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது.
 எனவே இந்த இடத்தில் ஒரு அழகிய கட்டுமானம் இருந்திருக்க வாய்ப்புண்டு, கட்டுமானத்தின் உட்புறம் இந்த சுடுமண் குழாய் இருந்திருக்கும், இதில் இருந்து தண்ணீர் சென்ற துளை இருந்திருக்க கூடும் என கருதுகின்றனர். தரை தளத்தினை முழுமையாக அகழாய்வு செய்யும் போது கீழேயும் கட்டுமானம் உள்ளதா என தெரிய வரும்.இந்த தரை தளம் கட்டடத்தின் கீழ்பகுதியாக இருக்க வாய்ப்புண்டு. தொடர்ச்சியான அகழாய்வு மூலம் தான் இதனுடைய உண்மையான பயன்பாடு தெரிய வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.அம்மாத இறுதிக்குள் அகழாய்வு பணிகள் நிறைவு பெற உள்ளதால் அதற்குள் அகழாய்வை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து