முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா போரில் குடும்பத்தினரை இழந்த சிறுவன் வலைதளங்களில் பரவும் போலி புகைப்படம்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ்  : சிரியா போரில் குடும்பத்தினரை இழந்து, அண்டை நாட்டுக்கு சிறுவன் ஒருவன் இடம்பெயர்ந்ததாக புகைப்படம் ஒன்று வலைதளங்களில் பரவி வருகிறது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிரியா அரசுக்கு ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் ஆதரவாக உள்ளன. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த பல்வேறு பகுதிகளை அரசு படையினர் மீட்டு வருகின்றனர். போர் காரணமாக ஏராளமான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில், கையில் பையுடன் சிரியாவை சேர்ந்த சிறுவன் ஒருவன் பாலைவனத்தில் தனியாக செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகியது. அதில் 4 வயதே ஆன அந்த சிறுவன் சிரியாவில் நடைபெற்று வரும் போரில் தாய் மற்றும் தங்கையை இழந்து வாடுவதாகவும், அவன் தனது தாய் மற்றும் தங்கையின் உடமைகள் அடங்கிய பையுடன் ஜோர்டானுக்கு இடம்பெயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. சமூக வலைதளத்தில் வைரலாகும் அந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்ததில், அது போலி என கண்டறியப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் 2014-ம் ஆண்டு எடுக்கப்பட்டுள்ளது. சிரியாவில் இருந்து ஜோர்டானுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். அப்போது அந்த சிறுவன் கூட்டத்தில் குடும்பத்தினரை தவற விட்டதாகவும், பின்னர் அவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் 2014-ம் ஆண்டே செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் அச்சிறுவன் குடும்பத்தினரை இழந்ததாக பரவும் தகவல் போலி என்பது உறுதியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து