முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

41 கோடி பயனாளர்களின் செல்போன் எண்களை வெளியிட்டது பேஸ்புக்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

சான் பிரான்சிஸ்கோ : ஏற்கனவே பாதுகாப்பு குளறுபடிகளில் ஜம்பவான் என்று பெயர்பெற்ற பேஸ்புக், தற்போது மீண்டும் அதனை ஒரு முறை நிரூபித்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் உள்ள பயனாளர்களில் 41 கோடி பேரின் செல்போன் எண்களை ஆன்லைனில் வெளியிட்டு மிகப்பெரிய பாதுகாப்பு விதிமீறலை செய்திருக்கிறது பேஸ்புக்.

அமெரிக்காவைச் சேர்ந்த 13.3 கோடி பயனாளர்களின் செல்போன் எண்களும், ஒரு கோடியே 80 லட்சம் இங்கிலாந்து பயனாளர்களின் எண்களையும், வியட்நாமைச் சேர்ந்த 5 கோடி பயனாளர்களின் செல்போன் எண்களும் ஆன்லைனில் கசிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பேஸ்புக் ஐ.டி.யுடன் அவர்களது செல்போன் எண்களும் வெளியாகியிருப்பதாகவும், இதன் மூலம் பயனாளர்கள் தேவையற்ற அழைப்புகளை எதிர்கொள்ளவும், சிம் ஸ்வாப்பிங், சிம் ஜேக்கிங் ஆகிய சிக்கல்களை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தி ஹேக்கில் இருந்து செயல்படும் லாப நோக்கற்ற அமைப்பின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர் சன்யம் ஜெயின் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளார். இது குறித்து பேஸ்புக் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், உடனடியாக செல்போன் எண்கள் ஆன்லைனில் இருந்து நீக்கப்பட்டது. சில செல்போன் எண்களுடன் அவரது நாடு, பாலினம், பெயரும் இடம்பெற்றிருந்ததாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து