முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரம் கைதுக்கு பின்னர் அடங்கி விட்டார் ஸ்டாலின்: அமைச்சர் ஜெயகுமார்

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : ப.சிதம்பரம் கைதுக்கு பின்னர் அடங்கி விட்டார் மு.க.ஸ்டாலின் என்று அமைச்சர் ஜெயகுமார்  கூறியுள்ளார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலினை பொறுத்தவரை சிதம்பரம் கைதுக்கு பிறகு அவரது குரல் மிகவும்  மென்மையாகிவிட்டது. ஏன் என்றால் அடுத்தது நீ. என்பது போல் ஒரு பயம் வந்துவிட்டது. இதைத்தான்  எச்.ராஜா தெரிவித்துள்ளார். நானும் இருக்கின்றேன் என்று குரல் கொடுத்திருக்கிறார். சிதம்பரம் கைதுக்கு பின்னர் மத்திய அரசை ஸ்டாலின் கடுமையாக விமர்ச்சனம் செய்துள்ளரா?

எங்களுக்கு மாநில நலன், மக்கள் நலன், நுகர்வோர் நலன் என்ற மூன்று விஷயங்களில் அவர்களை விட  எங்களுக்கு அக்கறை உண்டு. பொது விநியோக திட்டம் ஆண்டாண்டு காலமாக  செயல்படுத்திவருகிறோம். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல கிடையாது. ஒரு குக்கிராமத்தில் கூட  ரேஷன் கடையை வைத்து அனைத்து பொருட்களையும் தருகிறோம். இந்த கட்டமைப்பு எந்த  நிலையிலும் சிதையக்கூடாது என்ற அடிப்படை கொள்கைதான் அரசுக்கு உள்ளது. எனவே பொது விநியோக திட்டத்தில் எந்த பாதிப்பும் இருக்காது.

2 கோடி மக்களுக்கு விலையில்லா அரிசியைத் தருகிறோம். அவர்களுக்குத் தொடர்ந்து அரிசி கிடைக்கும்.  மக்கள் வாங்கக்கூடிய பொருட்கள் தொடர்ந்து கிடைக்கும். இங்கு இருக்கும் வெளிமாநிலத்தவருக்கு  அரிசி கிடையாது. இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதால் மக்களுக்கு எந்த பாதிப்பு கிடையாது. இது  ஸ்டாலினுக்கும் தெரியும். இருந்தபோதிலும் நானும் ஒரு அறிக்கை விட்டேன் என்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். இனிமேல் மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்ய மாட்டார் என்றுதான் நான்  நினைக்கிறேன். சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியது பா.ஜ.க கருத்தா என்று தெரியவில்லை. நாங்கள் எங்கள்  கருத்தைத் தெரிவிக்கிறோம்.

ஒரு அசைக்க முடியாத மாபெரும் இயக்கம்தான் அ.தி.மு.க. ஜெயலலிதா கூறியதுபோலதமிழகத்தை  தொடர்ந்து இந்த இயக்கம் ஆளும். உலக தமிழகர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டினர் பலர்  தமிழகத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளார்கள். அந்த முதலீட்டை முதல்வர் பெற்றுவருகிறர். இதைச் சிலரால் ஜீரணிக்க முடியவில்லை. இவர்களைப் பொறுத்தவரைச் சொல் ஒன்று. செயல் ஒன்று. சொல்  புத்தியும் கிடையாது. சுய புத்தியும் கிடையாது.

நாங்கள் முதல்வர் தலைமையில் வெளிநாடு செல்கிறோம். இவர் துணை முதல்வராக இருந்தபோதும் சரி, மேயராக இருந்தபோதும் சரி இவர் (ஸ்டாலின்) வெளிநாடு சென்றார். நாங்கள் குடும்பத்தை அழைத்துச் செல்லவில்லை. நாங்கள் அமைச்சர்களைத்தான் அழைத்துச் சென்றுள்ளோம். தி.மு.க.வினர் குடும்பத்தை அழைத்துச் சென்றார்கள்.தமிழர்கள் பரந்த மனபான்மை  கொண்டவர்கள். 6 கோடி பேருக்கு பரந்த மனப்பான்மை இருந்தாலும் ஒருவருக்கு மட்டும் பரந்த மனப்பான்மை இருக்காது. அவர்தான் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.  இவ்வாறு தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து