முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - செரீனா அரையிறுதிக்கு தகுதி - பெடரர் அதிர்ச்சி தோல்வி

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க் : அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, அமெரிக்க நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் 13-வது முறையாக தகுதி பெற்றுள்ளார். கால் இறுதியில் சீனாவின் கியாங் வாங்குடன் (18-வது ரேங்க்) மோதிய செரீனா (8-வது ரேங்க்) அதிரடியாக விளையாடி 6-1, 6-0 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்றார். இப்போட்டி வெறும் 44 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் 23 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள செரீனா, யு.எஸ். ஓபனில் தனது 100-வது வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு கால் இறுதியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ஜோகன்னா கோன்டாவை வீழ்த்தினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் பல்கேரிய வீரர் கிரிகோர் திமித்ரோவுடன் மோதிய சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் 6-3, 4-6, 6-3, 4-6, 2-6 என 5 செட்களில் கடுமையாகப் போராடி வீழ்ந்தார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 12 நிமிடத்துக்கு நீடித்தது. 2017-ல் தரவரிசையில் 3-வது இடம் வரை முன்னேறி இருந்த திமித்ரோவ், காயம் காரணமாக தொடர்ந்து அவதிப்பட்டு வந்தால் தற்போது 78-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். 20 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியனான பெடரர், 5-வது செட்டின் போது காயத்துக்கு சிகிச்சை பெற்றுக் கொண்டு சற்று நேரம் ஓய்வெடுத்தார். எனினும், தொடர்ந்து இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திமித்ரோவிடம் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

மற்றொரு கால் இறுதியில் ரஷ்யாவின் டானில் மெட்வதேவ் 7-6 (8-6), 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 2 மணி, 34 நிமிடத்துக்கு நடந்தது. மகளிர் இரட்டையர் அரை இறுதியில் விளையாட ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி - விக்டோரியா அசரென்கா (பெலாரஸ்) இணை தகுதி பெற்றுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் அமெரிக்காவின் ராஜீவ் ராம் - சமந்தா ஸ்டோசர் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து