முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் மத்திய அமைச்சருடன் இளவேனில் வாலறிவன் சந்திப்பு

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புது டெல்லி : டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூவை இளவேனில் வாலறிவன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பிரேசிலில் சர்வேதச துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டி நடைபெற்றது. பெண்களுக்கான 10மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்றது. இதன் முதல் சுற்றில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 109 பேர் பங்கேற்றனர்.

இதில் 8 பேர் இறுதி சுற்றுக்கு முன்னேறினர். இந்திய வீராங்கனைகள் இளவேனில் வாலறிவன் 4-வது இடத்தையும், அஞ்சும் மவுட்கில் 5-வது இடத்தையும் பிடித்தனர். அமெரிக்க வீராங்கனை மேரி கரோலின் முதல் இடத்தை பிடித்தார். மற்றொரு இந்திய வீராங்கனை அபூர்வி சந்தேலா 11-வது இடத்தை பிடித்ததால் தகுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் இளவேனில் வாலறிவன் 251.7 புள்ளிகள் ஈட்டி முதல் இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். தங்கம் வென்ற அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தங்கம் பதக்கம் வென்ற பிறகு கடந்த  3-ம் தேதி சென்னை திரும்பிய இளவேனிலுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. தனது வெற்றி குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. மேலும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் இன்னும் இருக்கின்றன.

அதற்காக முயற்சிப்பேன் என்று இளவேனில் தெரிவித்தார். இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ, துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை சந்தித்தார். அப்போது, தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் உள்ளிட்டோருக்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து