முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தைவானுக்கு திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கும் விழா

வெள்ளிக்கிழமை, 6 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில் தைவானில் இரண்டு திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படுகிறது.

வி.ஜி.பி. நிறுவனங்களின் தலைவரும், வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்க நிறுவனருமான டாக்டர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் உலகைத் தமிழால் உயர்த்துவோம் என்ற உன்னத நோக்குடன் கடந்த 25 ஆண்டுகளாக உலக நாடுகளில் 50 திருவள்ளுவர் திருவுருவச் சிலைகள் அமைத்தும், 16 திருக்குறள் மாநாடு நடத்திய சங்கம் வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம்.வருகின்ற அக்டோபர் மாதம் தைவானில் இரண்டு திருவள்ளுவர் சிலைகள் நிறுவப்படுகிறது. அக்டோபர் மாதம் 19-ம் தேதி ஹூவாலியன் மலையில் உள்ள பூங்காவில் திருவள்ளுவர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்ப்பு செய்த கவிஞர் யுசி தலைமையில் செய்துவருகிறார்கள். அக்டோபர் மாதம் 20-ம் தேதி தைவானின் தலைநகர் தைப்பை நகரில் நிகழும் திருக்குறள் மாநாட்டில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுகிறது. இவ்விழாவில் சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து பங்கேற்கிறது. டாக்டர் வி.ஜி.சந்தோசம் தலைமையில் ஏறக்குறைய 30 தமிழறிஞர்கள் குழு தைவான் சென்று விழாவில் பங்கேற்கின்றார்கள்.தைவான் நாட்டிற்கு இரண்டு திருவள்ளுவர் சிலைகள் வழியனுப்பும் விழா எம்.ஜி.ஆர். ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயரகவன், நீதியரசர் டி.என்.வள்ளிநாயம் மற்றும் தமிழறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் வி.ஜி.சந்தோசம் கூறும்போது, தமிழ்ப்பணியின் ஓர் அங்கமாக திருவள்ளுவர் சிலைகளை உலகில் பல்வேறு நாடுகளுக்கு வழங்குகிறேன். இதன் மூலம் உலகப் பொதுமறையாம் திருக்குறளின் அருமையும், பெருமையும் உயர்ந்தோங்கும் என்பது திண்ணம். உலகில் உள்ள தமிழ்மக்கள் அனைவரும் வீட்டில் தமிழில் பேசி, தமிழை படிக்க வேண்டும். திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை அனைவரும் அறியவேண்டும் என்றார். மேலும் தயாராக உள்ள திருவள்ளுவர் சிலைகளை கப்பல் மூலம் தைவானுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து