முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் மிகப் பெரிய ஸ்டார்பக்ஸ் உணவகம் சிகாகோவில் திறப்பு

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

சிகாகோ : உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவகம் சிகாகோவில் திறக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்டார்பக்ஸ் உலகில் அதிக துரித உணவகங்கள் வைத்துள்ள ஒரு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் உலகளவில் 30,000 இடங்களுக்கு மேல் இயங்கி வருகிறது. உலகளவில் டோக்யோவில்தான் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் நவம்பர் 15-ம் தேதி சிகாகோவில் 43 ஆயிரம் சதுர அடியில் 4 தளங்கள் கொண்ட ஸ்டார்பக்ஸ் உணவகத்தை திறக்க இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் புதிய தளமாக இது இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ஸ்டார்பக்ஸ், இங்கு சிறப்பான காபி, டீ பானங்களை வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. வளாகத்திலேயே காபிக் கொட்டைகளை வறுக்கும் ரோஸ்டரிகளும், அதன் சேமிப்பகங்களும் இருக்கும் என்றும், பார், கிரேப்ட் காக்டெயிலுடன் வழக்கத்தை விட வித்தியாசமாக பல ஆடம்பர உணவுப் பண்டங்கள் இங்கு கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளது.

சிகாகோவில் காபிக்கான மிக உணர்வுபூர்மான சூழலை உருவாக்கித் தருவதாக 2017-ல் ஏற்கெனவே அறிவித்த நிலையில், கலைநயமிக்க கட்டிட வடிவமைப்பு மூலம் வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் மத்தியில் மகிழ்ச்சியோடு செல்வதற்கு உகந்த 3-வது இடமாக இது இருக்கும் என ஸ்டார்பக்ஸ் நிறுவனம் கூறி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து