முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திராயன் செலுத்தப்பட்டதன் நோக்கம் 95 சதவீதம் வெற்றியடைந்துள்ளது - இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் திட்டவட்டம்

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : சந்திராயன் -2 விண்கலம் செலுத்தப்பட்டதன் நோக்கம் 95 சதவீதம் நிறைவேறியுள்ளதாக இஸ்ரோ முன்னாள் தலைவரும், மூத்த விஞ்ஞானியுமான மாதவன் நாயர் கூறியுள்ளார்.

சந்திராயன் - 2 விண்கலத்தின் லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

இது குறித்து மாதவன் நாயர் கூறியதாவது:-

விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் தருவாயில் சிக்னல் துண்டிக்கப்பட்டது வருத்தமான விஷயம் தான். நாடுமுழுவதுமே இந்த வெற்றியை எதிர்பார்த்து காத்து இருந்தது. விஞ்ஞானிகளின் வேதனையை புரிந்து கொள்ள முடிகிறது. சந்திராயன் ஏவப்பட்ட நடவடிக்கையை நாம் கூர்ந்து கவனித்தால் இது நமக்கு புரிய வரும். இறுதியாக 2.1 கிலோ மீட்டர் பயணத் தொலைவில் சிக்னல் துண்டிக்கப்பட்டு விட்டது. ஆனால் இது மிகவும் சிக்கலானது. இதற்காக பலரும் பல மணி நேரம் தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள். சிறிது நேரம் கடந்து இருந்தால் முழு வெற்றியை அடைந்திருக்க கூடிய தருவாயில் இப்படி நடந்துள்ளது. இதற்கான முழுமையான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. இருப்பினும் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து அதனை தெரிவிப்பர். எனினும் சந்திராயன் - 2 திட்டத்தில் 95 சதவீதத்துக்கும் மேல் வெற்றி கிடைத்துள்ளது. எனவே இதைப் பற்றி விஞ்ஞானிகள் அதிகமாக கவலைப்பட வேண்டாம். விண்கலம் தற்போதும் விண்வெளியில் தான் உள்ளது. அது திறன்பட தனது பணியை செய்து வருகிறது. இவ்வாறு மாதவன் நாயர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து