முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு வீண்போகாது: ராகுல் காந்தி உறுதி

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : இஸ்ரோ விஞ்ஞானிகளின் உழைப்பு எந்த காலத்திலும் வீண்போகாது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

சந்திராயன்  - 2 விண்கலத்தின், லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கான காரணம் எதுவும் உடனடியாக தெரியவில்லை. இதனை இஸ்ரோ தலைவர் சிவன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். சந்திராயன் - 2 விண்கலத்தின், லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண, கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், சந்திராயன்-2 திட்டம் நிறைவேற பாடுபட்ட இஸ்ரோவிற்கும் அதன் குழுவினருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு இந்தியனுக்கு உத்வேகம் அளித்துள்ளது. உங்களின் உழைப்பு என்றுமே வீண் போகாது என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து