முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் - 2-வது நாளாக அத்துமீறி தாக்குதல்

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

ஸ்ரீநகர் : எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து 2-வது நாளாக அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.

காஷ்மீரின் ரஜோரி மாவடத்தின் சுந்தர்பானி, நவ்ஷேரா பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதலில் ஈடுபட்டது. சிறிய ஆயுதங்கள், பீரங்கிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலுக்கு இந்திய ராணுவத் தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சர்வதேச எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் இந்த ஒப்பந்தத்தை மீறி அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று முன்தினம் (சனிக்கிழமை ) காலை ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ணா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டன. இதற்கு இந்திய தரப்பிலும் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்றும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து