முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் ஒழுங்கு நடவடிக்கை - ஆசிரியர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 8 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோபியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய நல்லாசிரியர் விருது பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியர்களும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்ட வல்லுனர்களிடம் கலந்து ஆலோசித்தபின் முதலமைச்சரிடம் கூறி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்ற நிகழ்வுகள் நடப்பது வேதனைக்குரியது. இது போன்ற ஆசிரியர்களினால் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்காலிக ஆசிரியர்களுக்கு புதிய சிலம்பஸ் குறித்த பயிற்சி அளிக்கவும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த கல்வி தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்தவும் அரசு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

மேலை நாடுகள் சுற்றுப் பயணத்தில் பின்லாந்து நாடு கல்வியில் மேன்மை அடைந்துள்ளது. எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளிலேயே நல்ல ஒழுக்கம், உடல் ஆரோக்கியம், பழக்கவழக்கம் பன்பாடு ஆகியவற்றை கற்று கொடுக்கின்றனர். ஆகவே இந்த புதிய முறைகளை நம்நாட்டிலும் கொண்டு வருவதற்கு நிதிகள் தேவைபடுகிறது. இதற்காக முதல்வருடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பறைகள் மாற்றப்பட்டுள்ளது. மேலும் சி.சி.டி.வி. கேமரா அமைக்க நிதி தேவைப்படுவதால் முதலமைச்சரிடம் அரசு பரிசீலனை செய்யும். 90 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எல்.கே.ஜி., யு.கே.ஜிக்கு அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சியளித்து பணியில் அமர்த்த வேண்டும் என்ற ஆசிரியர்கள் சங்கங்களின் கோரிக்கை குறித்து சமூக நலத்துறை தான் முடிவெடுக்க வேண்டும் ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். இருந்தாலும் இது குறித்து அரசு ஆய்வு செய்யும்.

ஆசிரியர்கள் தேர்வு முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. புதிய சிலபஸ் பாடத்தை முழுமையாக படித்தால் மட்டுமே ஆசிரியர்கள் தேர்வில் வெற்றி பெற முடியும். பணியில் உள்ள 1500 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் பயிற்சி பெற்று ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து