முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரயான்-2 திட்டத்தை பாராட்டிய பாக்.வீராங்கனை

திங்கட்கிழமை, 9 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

கராச்சி : பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை நமீரா சலீம், சந்திரயான்-2 திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் 95 சதவீதம் வெற்றி அடைந்தாலும், தகவல் தொடர்பு கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்பிட்டர் அனுப்பிய தெர்மல் புகைப்படம் மூலம் விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி இருப்பதாகவும் தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி நடப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து வெளியாகும் பத்திரிக்கையில், பாகிஸ்தானில் இருந்து விண்வெளிக்கு செல்ல முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நமீரா சலீம் அளித்துள்ள பேட்டியில், விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியில் மெதுவாக இறங்கச் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சிக்காக இந்தியா மற்றும் இஸ்ரோவிற்கு எனது பாராட்டுக்கள்.

சந்திரயான்-2 திட்டம் தெற்காசியாவின் மாபெரும் திட்டமாகும். இது சர்வதேச விண்வெளித்துறைக்கு பெருமை சேர்த்திருக்கிறது. விண்வெளித்துறையில் உலகத்தின் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. எந்த நாடு இதில் முன்னிலை வகிக்கிறது என்பது விஷயமல்ல. இவ்வாறு நமீரா சலீம் பாராட்டி கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாக்., நாடுகளுக்கிடையே பிரச்சினை நடைபெறும் இந்த நேரத்தில், பாக்., விண்வெளி வீராங்கனை நமீரா சலீம் இந்தியாவின் சந்திரயான்-2 திட்டத்தை பாராட்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து