முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்படும் அபராத தொகையை குறைப்பது பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம்: கட்காரி

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : போக்குவரத்து விதிமீறல்களால் விதிக்கப்படும் அபராத தொகையினை குறைப்பது பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்குவதுடன், விதிமீறல்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வகை செய்யும் மோட்டார் வாகன திருத்த மசோதா மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. கடந்த 1-ம் தேதி முதல் கடுமையான முறையில் நாடு முழுவதும் இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டு வருகிறது.

மோட்டார் வாகன விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதற்கு காரணமானவருக்கு ரூ. 5 லட்சம் வரையும், படுகாயம் ஏற்படுத்தினால் ரூ. இரண்டரை லட்சம் வரையும் அபராதம் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ. 5 ஆயிரமும், லைசென்ஸ் ரத்து செய்யப்பட்ட பின்னரும் வாகனம் ஓட்டினால் ரூ.10 ஆயிரமும் அபராதமும், குடித்து விட்டு வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுவோருக்கு ரூ.5 ஆயிரம் என அதிகபட்ச அபராதம் விதிக்க இந்த மசோதா வகை செய்கிறது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் போக்குவரத்து விதிமீறல் அபராதம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, போக்குவரத்து விதிமீறல்களால் விதிக்கப்படும் அபராத தொகையினை குறைப்பது பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் என கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து