முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி.-யின் 1536 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 15-ம் தேதி முதல் இலவச பயிற்சி துவக்கம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை  : டி.என்.பி.எஸ்.சி.யின் 1536 காலி பணியிடங்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 15-ம் தேதி முதல் தொடங்கும் என்று அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

தமிழ் நாடு அரசு தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்பட உள்ள காலி பணியிடங்களுக்கு முதல் நிலைத்தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று நிலைகளில் தேர்வு நடைபெறும். தேர்வு பெற்ற மாணவர்கள் முனிசிபல் கமிஷ்னர், துணை பதிவாளர், தணிக்கை ஆய்வாளர், கூட்டுறவு துறை சீனியர் ஆய்வாளர், தொழிலாளர் துறை ஆய்வாளர், வருவாய்த்துறை ஆய்வாளர் என பல்வேறு பணியிடங்களில் பணியமர்த்தப்பட உள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி பொதுவான பட்டப்படிப்பு என்றாலும், வயது உச்ச வரம்பு ஏதுமில்லாமல் போட்டியிட முடியும். முன்னாள் இராணுவ வீரர்களுக்கு மட்டும் வயது உச்ச வரம்பு 48 ஆகும். மேலும் விவரங்களுக்கு தேர்வாணையத்தின் இணையதளத்தில் ( www.tnpsc.gov.in )அறிந்து கொள்ளலாம் . முதல் நிலைத் தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றாலே அடுத்த நிலைக்கு முன்னேறலாம்.

குருப் 2 தேர்வில் பங்கு பெறும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாணவர்களுடைய திறமையை மேலே கொண்டு வரும் வகையில் கலந்துரையாடல் வடிவத்தில் நடைபெறும். இந்த வகுப்புகளை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும், அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையமும் ஆண்டுதோறும் இணைந்து நடத்தி வருகின்றன. சென்னையில் பயிற்சி வகுப்புகள் வரும் 15-ம் தேதி காலை 9.30 மணி முதல் தொடங்குகிறது. வகுப்புகள் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 9.30 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறும். சென்னை பாரிமுனை ஆர்மேனியம் தெரு, எண். 6/9. கச்சாலீஷ்வரர் கோயில் அக்ரகாரத்தில் பயிற்சி நடைபெறும். பயிற்சி பெற விரும்புவோர் பாலாஜி - 90432 29495. மோகன் - 98847 47217. வாசுதேவன் - 94446 41712 ஆகியோரை தொடர்பு கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து