முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சொந்த மண்ணில் இந்திய அணியை எதிர்கொள்ள காத்திருக்கிறோம் - தென்னாப்பிரிக்க கேப்டன் சொல்கிறார்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி : பலம் வாய்ந்த இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள ஆர்வத்துடன் எதிர்கொள்ள காத்திருப்பதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் குயின் டி காக் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி 3 டி20 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதன்படி, செப்டம்பர் 15-ல் தர்மசாலாவிலும், செப்டம்பர் 18-ல் மொகாலியிலும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும். செப்டம்பர் 22-ல் பெங்களூருவில், 3-வது இறுதி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெறும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பொறுத்தவரை அக்டோபர் 2-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

2-வது டெஸ்ட் போட்டி, அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை புனேவிலும், 3- வது டெஸ்ட் போட்டி, அக்.19-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை ராஞ்சியிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் படு தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்கா அணியில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக பேசிய தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் கேப்டன் குயின் டிகாக்,

வெற்றி தோல்விகளை பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்க விரும்புகிறோம். வெற்றிக்காகவே ஒவ்வொரு முறையும் எங்களை ஆயத்தப்படுத்தி வருகிறோம். அணியை மேம்படுத்த பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுடன் இந்திய அணியை எதிர்கொள்ள ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். பலம் வாய்ந்த இந்திய அணியை இளம் வீரர்களை கொண்ட தென்னாப்பிரிக்கா அணி எவ்வாறு எதிர்கொள்ள போகிறது என்று போட்டி தொடங்கிய பின்னரே தெரிய வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து