முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தர வரிசை: ஸ்மித், கம்மின்ஸ் தொடர்ந்து முதலிடம்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், பேட் கம்மின்ஸ் முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளனர். இங்கிலாந்து அணியுடன் நடந்து வரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், ஆஸி. வீரர் ஸ்மித் 3 டெஸ்டில் 671 ரன் குவித்து (அதிகம் 211, சராசரி 134.20, சதம் 3, அரை சதம் 2) விஸ்வரூபம் எடுத்துள்ளார். இந்த சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி கேப்டன் விராத் கோலியை பின்னுக்குத் தள்ளி நம்பர் ஒன் அந்தஸ்தை கைப்பற்றிய அவர், சமீபத்திய ஐ.சி.சி. தரவரிசையில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ள நிலையில், ஸ்மித் 937 புள்ளிகளுடன் முன்னிலையை உறுதிப்படுத்தி உள்ளார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் (878) 3-வது இடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர்கள் புஜாரா (825), ரகானே (725) இருவரும் முறையே 4-வது மற்றும் 7-வது இடத்தை தக்கவைத்துள்ளனர். பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங்கில் ஆஸி. வேகம் பேட் கம்மின்ஸ் 914 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்ரிக்காவின் காகிசோ ரபாடா (851), இந்திய வேகம் ஜஸ்பிரித் பூம்ரா (835) அடுத்த இடங்களில் உள்ளனர். இந்தியாவின் ஜடேஜா 12-வது இடத்திலும், ஆர்.அஷ்வின் 14-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து