முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் கைதியை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண் சிறை வளாகத்தில் தனி வீடு ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : கைதியை 13 ஆண்டுகளாக காதலித்த அமெரிக்க இளம்பெண் சட்டப்படி திருமணம் செய்து கொண்டதையடுத்து அவர்களுக்கு சிறை வளாகத்தில் தனி வீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பீனிக்ஸ் நகரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் 16 வயதில் தான் சந்தித்த நபர் 23 வருடங்கள் தண்டனை பெற்று சிறை சென்ற போதும் கடிதம் மூலம் காதலை வளர்த்து அவரை திருமணம் செய்துள்ளார். 2006-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நினா முதன்முறையாக தனது காதல் கணவரான மைக்கேலை ஒரு பார்க்கிங்கில் சந்தித்தார். அப்போது மைக்கேலுக்கு 17 வயது. நினாவுக்கு 16 வயது. சில வாரங்களிலேயே ஆயுதம் ஏந்தி கொள்ளையடித்த வழக்கில் மைக்கேல் கைதாகி விட்டார். கொள்ளைக் கூட்டத்தில் 17 வயது சிறுவன் என்ற அடைமொழியோடு அமெரிக்க பத்திரிகைகளில் புகைப்படத்துடன் மைக்கேல் தொடர்பான செய்திகள் வெளியாகின. வழக்கை விசாரித்த அமெரிக்க கோர்ட்டு மைக்கேலுக்கு 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. முதல் 6 ஆண்டுகள் இவர்களுக்கு இடையேயான காதல் கடிதம் மூலம் மட்டுமே வளர்ந்துள்ளது.

அதை தொடர்ந்து 6 வருட காத்திருப்புக்கு பின் சட்டப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தம்பதியர் மாதத்துக்கு 48 மணி நேரங்கள் வரை பார்த்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இவர்களுக்காக சிறை வளாகத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட தனி வீடு ஒதுக்கப்பட்டது. மைக்கேலுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து தனது காதல் கணவரை உலகுக்கு அறிமுகம் செய்தார். இது மைக்கேலுக்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது. அதன் பின்னரும் நினா சிறையில் நடக்கும் தங்கள் சந்திப்புகளை தொடர்ந்து அப்டேட் செய்து வருகிறார்.

கலிபோர்னியா மாகாணத்தில் 2014-ம் ஆண்டு சிறை சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை கழித்த இளம் கைதிகளுக்கு 90 நாட்கள் பரோல் வழங்கப்படும். மைக்கேல் 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையைக் கழித்து விட்டார். இன்னும் இரண்டு ஆண்டுகள் பரோலுக்காக காத்திருக்க வேண்டும் என தனது வருத்தத்தை நினா தெரிவித்துள்ளார்.

கணவரின் வருகை குறித்து பேசியுள்ள நினா ஹோப்லெர், “மைக்கேல் சிறையில் இருந்து விரைவில் வெளியே வருவார். விடுதலை பெற்று சுதந்திர மனிதனாக அவர் எடுத்து வைக்கும் முதல் அடியை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். நினாவுக்குத் தற்போது 29 வயதாகிறது. சிறையில் இருக்கும் மைக்கேலுக்கு 30 வயதாகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து