முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோங்கா பிரதமர் போஹிவா காலமானார்

வியாழக்கிழமை, 12 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

டோங்கா : பசிபிக் தீவு நாடான டோங்காவின் பிரதமரும் , காலநிலை மாற்றம் குறித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டவருமான போஹிவா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

இது குறித்து நியூஸிலாந்து தகவல் துறை அமைச்சகம் கூறுகையில்,  அகிலிஸி போஹிவா இரண்டு வாரங்களுக்கு முன்னர் கல்லீரல் பிரச்சினை காரணமாக நியூஸிலாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (நேற்று) மரணமடைந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போஹிவாவின் மறைவைத் தொடர்ந்து நியூஸிலாந்து நாடாளுமன்றம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போஹிவாவின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.

போஹிவாவின் மறைவு குறித்து ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தனது டுவிட்டர் பக்கத்தில், டோங்காவின் பிரதமர் போஹிவாவின் மறைவு அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். அவர் தனது மக்களுக்கு சிறந்த வழக்கறிஞராக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.

டோங்காவின் ஜனநாயக இயக்கத்துக்கு பெரும் சக்தியாக விளங்கினார் போஹிவா. கடந்த முப்பது வருடங்களாக டோங்காவில் நடந்த அரசாட்சிக்கு போஹிவா அரசியல் ரீதியாக தனது எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இதன் காரணமாக அவர் மீது தேசவிரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. மேலும் தேர்தலின் மூலம் டோங்காவின் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சாமனியரும் போஹிவாதான். அதிக முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவரும் போஹிவா தான்.றும் அரசியல் சார்ந்து மட்டும் இல்லாமல் காலநிலை மாற்றம் குறித்த தீவிரப் பிரச்சாரத்திலும் போஹிவா ஈடுபட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து