முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கராச்சியை மத்திய அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும்: டுவிட்டர்வாசிகள்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      உலகம்
Image Unavailable

கராச்சியின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்தால் பாகிஸ்தான் 4 ஆக பிரியும் என டுவிட்டர்வாசிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

கராச்சியின் நிர்வாக விவகாரங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு பரிசீலிப்பதாக பாகிஸ்தான் சட்ட அமைச்சர் பரோக் நசீம் தெரிவித்தார்.  இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பாகிஸ்தான் கராச்சியில் 149 வது பிரிவை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில், பல்வேறு ஹேஷ்டேக்குகள் பாகிஸ்தானில் வைரலாகி உள்ளன.

இது குறித்து பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறும் போது, இந்தியாவுக்கு எதிராக ஒரு கதையை உருவாக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. இதற்கிடையில் கராச்சி விவகாரத்தில் இதனை செய்து உள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நீங்கள் ஒரு கதையை உருவாக்க முயற்சிக்கிறீர்கள். அவர் அரசியலமைப்பற்ற முறையில் காஷ்மீரைக் கைப்பற்றினார். அதே நேரத்தில் நீங்கள் கராச்சியை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறீர்கள். இது வினோதமானது என கூறி உள்ளார். இதற்கிடையில், பொதுமக்களின் கருத்தை முக்கிய பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பும் அரசாங்கத்தின் திட்டத்தை அழுக்கு தந்திரம் என்று டுவிட்டர்வாசிகள் குறிப்பிட்டுள்ளனர். கராச்சி சிந்துவின் ஒரு பகுதி, யாராவது சிந்துவைப் பிரிக்க முயன்றால் நாங்கள் பாகிஸ்தானை 4 பகுதிகளாகப் பிரிப்போம் என்று ஒரு பயனர் டுவீட் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து