முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம்: மறு ஆய்வு கோரிய மனு வேறு அமர்வுக்கு மாற்றம்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டம் குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்  உத்தரவிட்டுள்ளது.

பழங்குடியினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தில் சில திருத்தங்களை செய்து சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் 2018-ல் உத்தரவிட்டது. எஸ்.சி. - எஸ்.டி சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் புகாரில் குற்றம் சாட்டப்பட்டவரை உடனடியாக கைது செய்யக் கூடாது எனவும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்கும் ஷரத்துக்களையும் வன்கொடுமை சட்டத்தில் அறிமுகம் செய்தும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. நாடு முழுவதும் தொடர் போராட்டங்களில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டன. இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து