முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பதவியில் மட்டும் நீடிக்கிறாரா கங்குலி? பி.சி.சி.ஐ.-க்கு அதிகாரி ஜெயின் அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடைமுறை அதிகாரியான டி.கே.ஜெயின், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி பி.சி.சி.ஐ. தொடர்பான பிற பதவிகளை உதறி ஒரேயொரு பதவியில் நீடிப்பதை உறுதி செய்யுமாறு கிரிக்கெட் வாரியத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தில் டி.கே.ஜெயின் பெங்கால் கிரிக்கெட் சங்கத் தலைவர் கங்குலிக்கு சந்தேகத்தின் பலனை சாதகமாக அளிப்பதாகவும் ஆனால் ஒரு பதவிக்கு மேல் அவர் வகிக்கக் கூடாது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் சவுரவ் கங்குலி பதவியில் இருக்கிறார் என்பது ஆதாயம் தரும் இரட்டைப் பதவி என்பதாக ஒழுங்குமுறை அதிகாரியால் கண்டுபிடிக்கப்பட்டால் இந்தப் புகார்களில் அவர் அளித்துள்ள பதில்கள் அதிலிருந்து அவர் ராஜினாமா செய்வதாக உடனடியாகக் கருதப்படும். இரண்டாவதாக மே 2019-ல் அவரது ஐ.பி.எல். அணியுடனான அவரது பதவியும் முடிவடைகிறது என்பதால் இந்த சந்தர்ப்பத்தில் அவரது இரட்டைப் பதவி விவகாரம் நிர்வகிக்கக் கூடியதாகக் கருதப்படும்.

சட்டத்தை அறியாமல் இருப்பது ஒருவருக்கு விதிவிலக்கை அளிக்காது என்பதால் விதி எண் 38(2)-ன் படி சவுரவ் கங்குலி தேவைப்படும் தகவல்களை அளிக்கக் கடமைப்பட்டவராகிறார். ஆனாலும் ஆகஸ்ட் 2018-க்குப் பிறகுதான் இந்த ஆதாயம் தரும் இரட்டைப்பதவி விதிமுறை அமலுக்கு வந்ததைக் கருத்தில் கொண்டு 3 பதவிகளில் இருப்பது இரட்டைப்பதவி நலன்கள் சார்ந்த விவகாரம் என்பதை அவர் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவருகுச் சந்தேகத்தின் பலனை சாதகமாக்க விரும்புகிறேன். இதன்படி சவுரவ் கங்குலி ஆதாயம் தரும் இரட்டைப்பதவிகளை துறந்து ஒரேயொரு பதவிக்கு மேல் அவர் வகிக்காமல் உறுதி செய்ய பி.சி.சி.ஐ.-ஐ அறிவுறுத்துகிறேன் என்று டி.கே. ஜெயின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து