முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 ஆண்டுகளுக்குப் பின் வருமான வரியை சுயமாக செலுத்த உ.பி. முதல்வர் முடிவு

சனிக்கிழமை, 14 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

40 ஆண்டுகளுக்குப் பின், உத்தரப் பிரதேசத்தில் முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் தங்களின் வருமான வரியை தங்களுக்கான ஊதியத்தில் இருந்து செலுத்த முடிவு செய்துள்ளனர்.

கடந்த 40 ஆண்டுகளாக உ.பி. முதல்வர்கள், அமைச்சர்களுக்கு வருமான வரியை அரசே செலுத்தி வருகிறது என்று செய்தி வெளியாகி ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால், வேறுவழியின்றி, இனிமேல் தங்களின் வருமான வரியை தாங்களே செலுத்த அமைச்சர்களும், முதல்வரும் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

உ.பி.யில் கடந்த 1981-ம் ஆண்டு முதல்வராக இருந்த வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டத்தில்தான் அமைச்சர்களும், முதல்வரும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டும், அந்த வருமான வரியை அரசே செலுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 1981-ம் ஆண்டு உ.பி. அமைச்சர்கள் ஊதியம், படிகள், சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின் உ.பி. மாநிலத்துக்கு இதுவரை 19 முதல்வர்கள், 1000 அமைச்சர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாநில அரசுதான் வருமான வரியைச் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை கூடியது. அந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், முதல்வருக்கு வருமான வரியை அரசே செலுத்தும் சட்டத்தை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் முதல்வரும், அமைச்சர்களும் தங்களின் வருமான வரியை அவர்களே செலுத்த வேண்டும். அரசின் கரூவூலத்தில் இருந்து செலுத்தமுடியாது என்று தீர்மானிக்கப்பட்டது.

இதுகுறித்து நிதியமைச்சர் சுரேஷ் குமார் கண்ணா விடுத்த அறிக்கையில், உ.பி. முதல்வர், அமைச்சர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் தங்களின் வருமான வரியை இனிமேல் அவர்களே செலுத்துவார்கள். அரசு கருவூலத்தில் இருந்து செலுத்தப்படாது எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து