முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க உ.பி. யில் மூலிகை வனம் அமைக்கிறார் மேனகா

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : உத்தரபிரதேச மாநிலத்தில் நமோ ஒன் எனும் பெயரில் மூலிகை வனம் உருவாகவுள்ளது. இதை முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் பரிசாக அளிக்க உள்ளார்.

பிரதமர் மோடியின் பிறந்த நாள் வரும் 17-ல் வருகிறது. இதற்காக பாஜகவின் மூத்த தலைவரான மேனகா காந்தி எம்.பி, தனது சுல்தான்பூர் மக்களவை தொகுதியில் ஒரு மூலிகை வனத்தை உருவாக்க உள்ளார். இதற்காக மாவட்ட அதிகாரிகள் 20 பிகா பரப்பளவில் காலியாக உள்ள அரசு நிலத்தை தேடி வருகின்றனர். இதில் செப்டம் பர் 17 அன்று சுமார் 1,500 பல்வேறு வகை மூலிகை செடிகளும், மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன. தனது முன்னிலையில் இவற்றை நடும் மேனகா அந்த வனத்திற்கு நமோ ஒன் எனப் பெயரிட உள் ளார். இதை பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கும் வகையில் அரசு சார்பில் அவற்றை தனது நேரடிப் பராமரிப்பில் வளர்க்க உள்ளார்.

இது குறித்து மேனகா காந்தி கூறும் போது, சுற்றுச்சூழல் மீதான எனது அன்பு மிகவும் பழமையானது. மரம், செடி, கொடி மற்றும் விலங்குகள் போன்றன மனித உயிர்களை விட மதிப்புக் குறைந்ததல்ல. இதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம். இவை எதுவும் இவ்வுலகில் இல்லை எனில் இங்கு மனிதர்களும் உயிர் வாழ்வது கடினம். பிரதமர் மோடியும் சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர், உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். இதனால், அவருக்கு இந்த வனத்தை பிறந்தநாள் பரிசாக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.

இந்த மூலிகை வனத்தில் துளசி, சந்தனம், மஞ்சள், பப்பாளி, கற்றாழை, அமுக்ரா கிழங்கு, தண்ணீர் விடான் கிழங்கு, சங்கு புஷ்பம், நெட்டிலிங்கம், அதிமதுரம், சர்ப கந்தா (விஷமுறிவு செடி), வல்லாரை, அசோகா, முருங்கை உள்ளிட்ட செடிகளும், மரக்கன்றுகளும் நடப்பட உள்ளன. தேசிய ஜன நாயக கூட்டணி ஒவ்வொரு முறை மத்தியில் அமையும் போதும் அமைச்சர் பதவி மேனகாவுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து