சிலைகளை தாக்குவதால் தலைவர்களை சிறுமைப்படுத்திவிட முடியாது - பிரியங்கா

ஞாயிற்றுக்கிழமை, 15 செப்டம்பர் 2019      இந்தியா
Priyanka 2019 09 02

புதுடெல்லி : மகாத்மா காந்தி, பாபா சாகிப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை தாக்குவதால் அவர்களை யாராலும் சிறுமைப்படுத்திவிட முடியாது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார். 

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் ஜலாவுன் மாவட்டத்தில் மகாத்மா காந்தியின் காந்தியின் சிலை மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தினர். உடலில் இருந்து தலைப்பகுதி நீக்கப்பட்ட நிலையில் காந்தியின் சிலை அலங்கோலப்படுத்தப்பட்டிருந்தது.

இதே மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்னர் பாபா சாகிப் அம்பேத்கர் சிலையின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இந்நிலையில், இந்த தாக்குதல்கள் தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாத்மா காந்தி, பாபா சாகிப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகளை தாக்குவதால் அவர்களை யாராலும் சிறுமைப்படுத்திவிட முடியாது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

சிலைகளை அவமரியாதை செய்யும் கோழைகளான சமூகவிரோதிகளுக்கு இந்த நாட்டின் உயர்ந்த மக்களை இருட்டில் அவமதிப்பது ஒன்றுதான் அவர்களின் வாழ்நாள் நோக்கமாக இருக்க முடியும். இப்படி சிலைகளை தாக்குவதால் அவர்களின் உயர்வை சிறுதுளியளவுக்கும் நீங்கள் சிறுமைப்படுத்திவிட முடியாது’ என பிரியங்கா பதிவிட்டுள்ளார்.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து