முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக பா.ஜ அரசுக்கு மத்திய அரசை கேள்வி கேட்க தைரியம் இல்லை- சித்தராமையா குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 16 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகத்தில் உள்ள கோழை அரசுக்கு மத்திய அரசை கேள்வி கேட்கும் தைரியம் இல்லை என்று கூறி மாநில அரசை சித்தராமையா கடுமையாக விமர்சித்துள்ளார்.  

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மழை வெள்ளத்தால் ரூ.36 ஆயிரம் கோடி அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட வழங்கவில்லை. கர்நாடகத்தில் உள்ள கோழை அரசுக்கு, மத்திய அரசை கேள்வி கேட்கும் தைரியம் இல்லை. கர்நாடகத்தில் கடந்த 2009-ம் ஆண்டு எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தார்.
அப்போதும் வட கர்நாடகத்தில் அதிகளவில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இதனால் பெரிய அளவில் சேதம் உண்டானது. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் கர்நாடகம் வந்து வெள்ள சேதங்களை பார்வையிட்டார். உடனடியாக ரூ.1,500 கோடி நிதி உதவியை வழங்கிவிட்டு சென்றார்.

இப்போது உள்ள பிரதமர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை?. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடனை செலுத்தும்படி விவசாயிகளுக்கு வங்கிகள் நோட்டீசுகள் அனுப்புகின்றன. மனிதநேயம் என்று ஒன்று இருந்தால் மாநில அரசு, விவசாயிகளுக்கு நோட்டீசு அனுப்புவதை உடனடியாக உடனே நிறுத்த வேண்டும்.

சிக்கமகளூரு, கதக், ஹாவேரி ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் சொத்துகளை இழந்த விவசாயிகள் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இதேபோல் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் உள்ளனர். மத்திய-மாநில அரசுகள் இருந்தும், இல்லாதது போல் உள்ளன.

அடிக்கடி வெளிநாட்டுக்கு செல்லும் பிரதமர், கர்நாடகம் வந்து வெள்ளத்தில் சிக்கிய மக்களின் கஷ்டங்களை கேட்காதது வேதனை அளிக்கிறது. நமது விஞ்ஞானிகள் பகல்-இரவாக உழைத்து நிலவுக்கு சந்திரயான்-2 விண்கலத்தை விண்ணில் செலுத்தினர். அதை பார்க்க பிரதமர் இங்கு வந்தார். பிரதமர் வந்ததால் தான் அந்த விண்கலம் தனது இலக்கை அடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து