முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் சபாநாயகர் தற்கொலைக்கு ஜெகன்மோகன் அரசே காரணம் - சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்  : முன்னாள் சபாநாயகர் தற்கொலைக்கு ஜெகன்மோகன் அரசே காரணம் என்று தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.  
ஆந்திராவில் கடந்த தெலுங்குதேசம் ஆட்சியின் போது சபாநாயகராக இருந்தவர் கோடலா சிவபிரசாத் (72).

தெலுங்குதேச கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் ஐதராபாத்தில் வசித்து வந்தார். நேற்று முன்தினம் தன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். டாக்டரான இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

என்.டி.ராமராவ் தெலுங்குதேசம் கட்சியை தொடங்கியதில் இருந்து அக்கட்சியில் பணிகளை சிறப்பாக செய்து வந்த இவர் கடந்த 1983-ம் ஆண்டு முதல் 6 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். என்.டி.ராமராவ் மற்றும் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவைகளில் அமைச்சராக பணியாற்றி உள்ளார். சபாநாயகராகவும் இருந்துள்ளார்.

இவர் சபாநாயகராக இருந்தபோது சட்டசபையில் இருந்து ரூ.2 கோடி மதிப்பில் பர்னீச்சர் பொருட்களை தன் வீட்டுக்கு எடுத்துச் சென்றதாக புகார் எழுந்தது. புதிதாக ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் அரசு இந்த புகார் குறித்து போலீஸ் விசாரணைக்கு உத்தர விட்டது.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி கோடலா சிவபிரசாத் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்தநிலையில் அவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டார். கோடலா சிவபிரசாத் மரணத்துக்கு ஜெகன் அரசின் அரசியல் பழிவாங்கலே காரணம் என தெலுங்குதேசம் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இதுகுறித்து தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

டாக்டர் தொழிலை திறம்பட செய்துவந்த சிவபிரசாத் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதற்கு அரசியல் பழிவாங்கலே முக்கிய காரணம். தேர்தல் சமயத்தில் இருந்து இப்போது வரை அவர் மீது ஆளும் கட்சியினர் பொய் குற்றச்சாட்டுக்களை கூறி வந்தனர். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுகுறித்து பலமுறை என்னிடம் மனமுடைந்து பேசி உள்ளார். நான் அவருக்கு ஆறுதல் கூறி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து