முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் கன்னடமே முதன்மையான மொழி - எடியூரப்பா கருத்து

செவ்வாய்க்கிழமை, 17 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம் தான் முதன்மையான மொழி. கன்னடத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.  

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நாடு முழுவதும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்று பேசினார். இதற்கு தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களின் கருத்துகளை வெளியிட்டனர். 
ஆனால் இந்த விஷயத்தில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா கருத்து எதுவும் கூறாமல் மவுனம் காத்து வந்தார். இந்த நிலையில் அவர் தனது மவுனத்தை கலைத்துள்ளார். எடியூரப்பா  தனது டுவிட்டரில் இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

நமது நாட்டில் அதிகாரப்பூர்வமாக உள்ள அனைத்து மொழிகளும் சமமானவை. கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம் தான் முதன்மையான மொழி. கன்னடத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தில் நாங்கள் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். கன்னடத்தையும், கலாசாரத்தையும் மேம்படுத்த நாங்கள் உறுதி பூண்டுள்ளோம்.  இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து