முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனா ஓபன் பாட்மிண்டன்: வெளியேறினார் சிந்து

வியாழக்கிழமை, 19 செப்டம்பர் 2019      விளையாட்டு
Image Unavailable

உலக சாம்பியன் பிவி.சிந்து சீனா ஓபன் பாட்மிண்டனில் பரபரப்பான திரில் ஆட்டத்தில் கடைசியில் துரதிர்ஷ்டவசமாக தோல்வியடைந்து வெளியேறினார்.

தாய்லந்து வீராங்கணை போர்ன்பவி சோச்சுவாங் என்பவரிடம் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் பி.வி.சிந்து 12-21, 21-13, 21-19 என்ற செட்கணக்கில் நெருக்கமான போட்டியில் தோல்வி தழுவி வெளியேறினார். சிந்து முதல் செட்டில் முதலில் 3-0 என்ற முன்னிலை பெற்றார். பிறகு அபாரமான ஸ்மாஷ், வாலிகளுடன் 7-1 என்று முன்னிலை பெற்றார். ஆனால் தாய்லாந்து வீராங்கனை அதன் பிறகு தன் ஸ்மாஷ் மற்றும் சர்வ்களிண்டால் 10-11 என்று நெருக்கினார். ஆனால் சிந்து மீண்டும் வெறிகொண்டு ஆட 8 புள்ளிகளை தொடர்ச்சியாக வென்றார்.  இதனையடுத்து 19-10 பிறகு 21-12 என்று ஆதிக்க வழியில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

2-வது செட்டில் தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவி பிரமாதமான ஆட்டத்தில் 5-1 என்று முன்னிலை வகித்தார். ஆனால் சிந்துவும் விடாப்பிடியாக ஆடி 7-9 என்று நெருங்கினார். ஆனால் தாய்லாந்து வீராங்கனை அதன் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. 6 புள்ளிகளைத் தொடர்ச்சியாக வென்று 15-7 என்றும் பிறகு 21-13 என்று 2வது செட்டைக் கைப்பற்ற ஆட்டம் பரபரப்பானது. 3-வது செட் இருவரும் கடுமையாக ஆடிய செட்டாக அமைந்தது. இருவரும் 6-6 என்று சமனிலையில் இருந்தனர். பிறகு சிந்து ஆடிய சில ஷாட்கள் தாய்லாந்து வீராங்கனையை நிலைகுலைய வைக்க சிந்து 11-7 என்று முன்னிலை வகித்து வெற்றிக்கு அச்சாரம் இட்ட நிலையில் போர்ன்பவி மீதான தன் பிடியை சிந்து தளர்த்த அவர் 7 புள்ளிகளிலிருந்து 8 புள்ளிகளை வெல்ல, சிந்துவும் 8 புள்ளிகளை மட்டும் பெற சிந்து சார்பாக 3-வது செட் 19-15 என்று வெல்லும் நிலையில் இருந்தது.

இந்த நிலையிலிருந்து போர்ன்பவியின் ஆட்டமும் சிந்துவின் அன்போர்ஸ்டு எரர்களும் சேர்ந்து தாய்லாந்து வீராங்கனை போர்ன்பவி 6 புள்ளிகளை தொடர்ச்சியாக பெற்று போட்டியையும் வெல்ல வைத்ததோடு சிந்துவை வெளியேற்றி விட்டது.போர்ன்பவியின் ஸ்மாஷ்களும் கிராஸ்கோர்ட் ரிடர்ன்களையும் சிந்து சமாளிக்கத் தவறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து