முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா பயணம்:

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2019      இந்தியா
Image Unavailable

அரசு முறை பயணமாக நேற்று பிரதமர் மோடி அமெரிக்கா புறப்பட்டார். இன்று பிற்பகல் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றடைகிறார். வரும் 27-ம் தேதி வரை அமெரிக்காவில் பல்வேறு நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்கிறார்.

பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் குறித்து நியூயார்க்கில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட ஐ.நா-வுக்கான சிறப்பு பிரதிநிதி சையத் அக்பருதீன் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் சந்திப்பு குறித்தும் விவரித்துள்ளார். ஹூஸ்டன் நகரில் நாளை 22-ம் தேதி காலையில் பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் சந்திப்பு நிகழவுள்ளது. இதை தொடர்ந்து அமெரிக்க வாழ் இந்தியர்கள் 50 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ள ஹவுடிமோடி நிகழ்வில் பிரதமர் மோடியுடன் எதிர்பாராத விருந்தினராக அதிபர் டிரம்பும் கலந்து கொள்ள உள்ளார். பின்னர் அதிபர் டிரம்புடன் மோடி பேச்சு நடத்த உள்ளார். அதனை தொடர்ந்து இந்தியா - அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தையில் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அறிவித்த டிரம்ப், பிரதமர் மோடியுடனான சந்திப்பில் இப்பிரச்சனையை எழுப்ப மாட்டார் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதையடுத்து காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், அதன் தொடர்பான அனைத்தும் உள்நாட்டு விவகாரங்கள் என்றும், இதில் தலையிட எந்த நாட்டுக்கும் உரிமை இல்லை என்றும், இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியர்கள், அமெரிக்கர்கள் பங்கேற்கவுள்ள 90 நிமிட கலாச்சர நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடியுடன் அதிபர் டிரம்ப் பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் சுமார் 400 கலைஞர்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

வரும் 23-ம் தேதி சுற்றுச்சூழல் தொடர்பான மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். இதன் பின்னர் நியூயார்க் செல்லவுள்ள பிரதமர் மோடி,  வரும் 24-ம் தேதி ஐ.நா. சபை ஏற்பாடு செய்துள்ள மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். வரும் 27-ம் தேதி ஐ.நா. பொதுக்குழு கூட்டத்திலும் பங்கேற்று பிரதமர் மோடி உரை நிகழ்த்தவுள்ளார். அதே நாளில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் உரை நிகழ்த்தவுள்ளதால் உலகின் கவனம் ஐ.நா. கூட்டத்தை எதிர்நோக்கி திரும்பியுள்ளது. ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் உரை நிகழ்த்திய பின்பு அன்றைய தினமே புறப்பட்டு பிரதமர் மோடி இந்தியா திரும்ப உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து