முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படகு கவிழ்ந்து உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. ஒரு லட்சம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்து உயிரி 7 பேரின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கீழையூர் சரகம், செருதூர் கிராமத்தைச் சேர்ந்த நடுக்காட்டான் மகன் செல்வமணி, கடலில் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும், நாகப்பட்டினம் மாவட்டம் மற்றும் வட்டம், வடக்குப்பொய்கைநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த அஞ்சம்மாளின் கணவர் கோவிந்தராஜ், கடலில் மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் பாம்பன் மீன்பிடி தளத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த அம்புரோஸ் மகன் சிந்தாஸ் மற்றும் ஆங்கிளிஸ் மகன் மினோன் ஆகிய இரு மீனவர்களின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியையும், கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், கொல்லங்கோடு கிராமத்தைச் சேர்ந்த ஜோண் என்பவரின் மகன்  சகாயம் மற்றும் ஜெபஸ்தியான் பிள்ளை மகன் லூர்துராஜ் ஆகிய இரண்டு மீனவர்கள் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு விபத்துக்குள்ளானதில் இரு மீனவர்களின் உடல்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியையும்,

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், ஏழுதேசம் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிபிள்ளை மகன் அருளிஸ், மீன் பிடி பணி முடிந்து கரை திரும்பும் போது, படகு விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் வேதனை அடைந்தேன்.  மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, படகு கவிழ்ந்து உயிரிழந்த . செல்வமணி, கோவிந்தராஜ், சிந்தாஸ், மினோன், சகாயம், லூர்துராஜ் மற்றும் அருளிஸ் ஆகிய 7 நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 7 நபர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து