பாகிஸ்தான் பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீண்டும் செயல்படுகிறது- ராணுவ தளபதி

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      இந்தியா
Bipin Rawat 2019 09 23

சென்னை : பாகிஸ்தான் பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் முகாம் மீண்டும் செயல்படுகிறது என்று சென்னையில் ராணுவ தளபதி தெரிவித்தார்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடந்த விழாவில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஷ்மீர் எல்லையில் நமது ராணுவம் பலத்த காவல் பணியில் ஈடுபட்டுள்ளது. நமது வீரர்கள் சிறப்பாக எல்லை பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். எல்லை காவலை மேலும் பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

எல்லையில் காவல் காப்பது என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும். நமது நாட்டு எல்லையில் பயங்கரவாதம் மிக அதிகளவில் இருப்பதால் அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. காஷ்மீர் மாநிலத்தில் தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. விரைவில் அதை தகர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளை கண்டுபிடித்து ஒடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும், காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கும் இருந்த தொடர்பு தற்போது துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை அனுப்ப பாகிஸ்தான் எல்லையில் தொடர்ந்து அத்துமீறல்களில் ஈடுபடுகிறது. அந்த அத்து மீறலை எப்படி கையாள்வது என்பது நமது ராணுவத்துக்கு தெரியும்.

எல்லையில் ஊடுருவலை தொடர்ந்து முறியடித்து வருகிறோம். பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படுகிறது. எல்லையில் நமது வீரர்கள் விழிப்புடன் பணியாற்றி வருகிறார்கள்.

பாகிஸ்தானில் பாலகோட் பகுதியில் ஜெய்ஷ்-இ- முகமது பயங்கரவாதிகள் முகாம் மிகப்பெரிய அளவில் இயங்கி வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த முகாமை நமது விமானப்படை குண்டு வீசி அழித்தது. அந்த சமயத்தில் சுமார் 500 பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ தயார் நிலையில் இருந்தனர். இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பயங்கரவாதிகள் பின்வாங்கி சென்று விட்டனர்.

இந்திய விமானப்படை தாக்குதலில் அந்த பயங்கரவாதிகள் முகாமுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. தற்போது பாலகோட் பயங்கரவாதிகள் முகாமை பாகிஸ்தான் மீண்டும் சீரமைத்துள்ளது. அங்கு ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் முகாம் மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது. இதை நமது படையினர் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.
மக்களிடம் பிரிவினை மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்த சிலர் வேண்டுமென்றே இஸ்லாமை பயன்படுத்துகிறார்கள். இஸ்லாம் பற்றி சரியாக போதிக்கும், சரியான அர்த்தத்தை போதிக்கும் மத போதகர்களே தேவை என்பது எனது கருத்தாகும். இவ்வாறு இந்திய ராணுவ தலைமை தளபதி பிபின்ராவத் கூறினார். 

இதற்கிடையே பாலகோட் பயங்கரவாதிகள் முகாமில் மீண்டும் தீவிர ஆயுத பயிற்சி நடப்பதை இந்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது. அந்த ஆயுத பயிற்சி முகாமை பாகிஸ்தான் முழுமையாக சீரமைத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை

Aval Ladoo Recipes in Tamil | அவல் லட்டு | Sweets Recipe in Tamil

Star Hotel Chicken Shami Kabab Recipe in Tamil | சிக்கன் ஷாமி கபாப் | Chicken Recipes

Star Hotel Coriander Chicken Recipe in Tamil| | கொத்தமல்லி சிக்கன்| Kothamalli Chicken | Chicken Recipe

Fish Manchurian recipe in Tami l மீன் மஞ்சுரியன் l How to make fish manchrian in Tamil|Fish Recipes

Madurai Special Kari Dosa Recipe in Tamil | மதுரை மட்டன் கறி தோசை | Mutton Kari Dosa | Keema Dosa

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து