முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : இன்று (24-ம் தேதி) மாலை 6 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு வரும் அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் முறைப்படி அறிவித்தது. இதனையடுத்து இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் தயாராகி வருகின்றன.

தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு நாங்குநேரி தொகுதி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி நாங்குநேரி தொகுதிக்கு வேட்பாளரை தேர்வு செய்ய தயாராகி வருகிறது. அ.தி.மு.க. தரப்பில் இருந்து இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டு தொகுதிகளுக்கும் போட்டியிட அ.தி.மு.க.சார்பில் விரும்ப மனுக்கள் குவிந்துள்ளன.

இந்த நிலையில் இன்று  (24-ம் தேதி) மாலை 6 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று (செப். 24-ம் தேதி) மாலை 6 மணிக்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், அமைப்புச்செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து