முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரத்தில் கன மழை: திருக்கோவில்.சாலைகளில் மழைநீர் தேக்கம்: பொதுமக்கள்,பக்தர்கள் அவதி.

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம், ராமேசுவரம் பகுதயில் நேற்று அதிகாலையில் திடீரென கன மழை பெய்ததால் திருக்கோவில்,சாலைகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களும்,பக்தர்களும் பெரும் அவதிப்பட்டனர்.  ராமேசுவரம் பகுதியில் பல மாதங்களுக்கு  பின்பு  நேற்று அதிகாலையில் 4.50 மணிக்கு திடீரென் கன் மழை பெய்தது. சுமார் 1.20 மணி நேரம் விடாமல் கன மழை பெய்ததால் ராமேசுவரம் திருக்கோவில் சுவாமி,அம்மன் சன்னதிகள்,இரண்டாம் பிரகாரம் மற்றும் சில பகுதிகளில் மழை நீர் தேங்கியது.இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய செல்வதற்கு மிகவு அவதிப்பட்டனர். திருக்கோவிலில் போதுமான துப்புறவு ஊழியர்கள் இல்லாததால் தேங்கிய மழை நீரை கடத்துவதற்கு திருக்கோவில் அதிகாரிகள் அவதிப்பட்டனர்.அதுபோல ராமேசுவரம் நகர் பகுதி முழுவதும் சாலைகளில் மழை நீர் தேங்கியது.இதனால் வாகனங்களும்,பொதுமக்களும் கடந்து செல்ல அவதிப்பட்டனர்.பகல் முழுவதும் மேகம் இருண்ட நிலையில் காணப்பட்டது.இதனால் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
 
பாம்பன்  சாலைப்  பாலம் தடுப்பு சுவரில் வேன் மோதி  விபத்து:
பாம்பன் பகுதியில் நேற்று அதிகாலையில் கன மழை பெய்ததால் சாலையில் நீர் தேங்கியது.இதில்  ராமேசுவரம் பகுதியிலிருந்து மதுரையை நோக்கி சென்ற  சரக்கு ஏற்றி செல்லும் வேன் நிலை தடுமாறி பாம்பன்  சாலைப் பாலம் தடுப்பு சுவற்றில் மோதி தடம் புறண்டு கிழே தலைகிழாக விழுந்தது.இதில் வேன் ஓட்டுநர் மதுரை உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் மாரியப்பன் மற்றும் வேனிலிருந்து மீன் வியாபாரிகள் ஆகியோர்கள் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.மேலும் இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார்கள் வேனை அப்புறப்படுத்தி பாம்பன் வாட்ஸாப் குழுவினர்கள் மற்றும் பொதுமக்கள்  உதவியுடன் காயமடைந்தவர்களை ராமேசுவரம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீஸார்கள் வழக்கு பதிந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து