பாகிஸ்தான் பயிற்சியாளர் ஹக்கின் சம்பளம் எவ்வளவு? அவரே வெளியிட்ட தகவல்

வியாழக்கிழமை, 26 செப்டம்பர் 2019      விளையாட்டு
Haq s salary 2019 09 26

இஸ்லாமாபாத் : 2 பொறுப்புகளை வகித்துவரும் பாகிஸ்தான் பயிற்சியாளரின் சம்பளம் எவ்வளவு? அவரே அது குறித்து ருசிகரமான பதில் அளித்து உள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர் என இரண்டு பொறுப்புகளை வகித்து வருகிறார். முதன்முறையாக தனது சம்பளம் குறித்த விவரங்களைப் பகிர்ந்து கொண்ட மிஸ்பா, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் எந்தக் கோரிக்கையும் வைக்கவில்லை என்றும், முந்தைய பயிற்சியாளர் மிக்கி ஆர்தரின் சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகவும் கூறி உள்ளார்.

இலங்கைக்கு எதிரான பாகிஸ்தானின் உள்நாட்டுத் தொடருக்கு முன்னதாக மிஸ்பா உல் ஹக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலைகளைப் பெறுவதற்கு நான் எந்த மந்திரமும் செய்யவில்லை. சம்பளக் கோரிக்கைகள் எதுவும் நான் வைக்கவில்லை. முந்தைய பயிற்சியாளருக்கு கொடுப்பதையே எனக்குத் தருமாறு கேட்டேன் என கூறினார்.  பாகிஸ்தான் கிரிக்கெட்டில் முதல் முறையாக - முன்னாள் கேப்டன் தனது இரட்டை பொறுப்புக்காக வாங்கிக் கொண்டிருக்கும் சரியான சம்பளத்தை மிஸ்பா அல்லது பி.சி.பி. வெளியிடவில்லை என்றாலும், ஜியோ நியூஸில் மிஸ்பா ரூ. 28 லட்சம் (மாதாந்திர) ஒப்பந்தம் செய்யபட்டு உள்ளதாக கூறி உள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் தனது தலைமை பயிற்சியாளர் மற்றும் தலைமை தேர்வாளர் என்ற இரட்டை பொறுப்புக்கு மூன்று வருட காலத்திற்கு ஆண்டுக்கு சுமார் 3.4 கோடி ரூபாய் பெற உள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பயிற்சியாளர்களை காட்டிலும் கணிசமாக உயர்ந்தது என்றாலும், இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை விட குறைவுதான். ரவிசாஸ்திரி ஆண்டுக்கு ரூ . 9.5 கோடி முதல் ரூ.10 கோடி வரை வாங்குவதாக ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து