ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவராக அசாருதீன் தேர்வு

வெள்ளிக்கிழமை, 27 செப்டம்பர் 2019      விளையாட்டு
SPORTS-1 2019 09 27

Source: provided

ஐதராபாத் : ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட முகமது அசாருதீன் 173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்திற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், பிரகாஷ் சந்த் ஜெயின் ஆகியோர் போட்டியிட்டனர். 

இதில் முகமது அசாருதீன் 173 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ் சந்த் ஜெயின் 73 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து