உலகச் சாம்பியன்ஷிப் தடகளம்: அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேனுக்கு தங்கப்பதக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2019      விளையாட்டு
Christian Coleman Gold medal 2019 09 29

கத்தார் : உலகச் சாம்பியன்ஷிப் தடகளத்தில், ஆடவருக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன் தங்கப்பதக்கம் வென்றார்.

உலகின் அதிவேக மனிதர் யார் என்பதை தீர்மானிக்கும் இந்தப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்றது. வேகப்புயல் உசேன் போல்ட் ஓய்வு பெற்ற பிறகு நடைபெறும் முதல் உலகச் சாம்பியன்ஷிப் தடகளப் போட்டி என்பதால், கூடுதல் எதிர்பார்ப்பு நிலவியது. இதில் 23 வயதான அமெரிக்காவின் கிறிஸ்டியன் கோல்மேன், 100 மீட்டர் பந்தய இலக்கை, 9 புள்ளி 76 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். நடப்புச் சாம்பியன் என்ற அந்தஸ்துடன் களமிறங்கிய மற்றொரு அமெரிக்க வீரரான ஜஸ்டின் கேட்லின், 9 புள்ளி 89 நொடிகளில் இலக்கை எட்டி இரண்டாவது இடம் பிடித்தார். கனடா வீரர் ஆண்ட்ரே டி கிராஸி மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து