ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் போட்டி: இந்தியாவின் சுமித் நகால் பட்டம் வென்று சாதனை

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2019      விளையாட்டு
smith nagal won title 2019 09 30

பியுனோஸ் அயர்ஸ் : அர்ஜென்டினாவின் பியுனோஸ் அயர்ஸ் நகரில் ஏ.டி.பி. சேலஞ்சர் பட்டத்திற்கான டென்னிஸ் போட்டிகள் நடந்தன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் அந்நாட்டின் பகுன்டோ போக்னிஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த சுமித் நகால் (வயது 22) விளையாடினர். இந்த போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 37 நிமிடங்கள் வரை நடந்தது.

உலக தரவரிசையில் 161வது இடத்தில் உள்ள நகால் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் போக்னிசை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இதனால், பியுனோஸ் அயர்ஸ் நகரில் நடந்த ஏ.டி.பி. சேலஞ்சர் போட்டியில் பட்டம் வென்ற முதல் ஆசியர் என்ற பெருமையை நகால் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து