முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நத்தம் பகுதிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம்

புதன்கிழமை, 2 அக்டோபர் 2019      திண்டுக்கல்
Image Unavailable

 நத்தம், -திண்டுக்கல் மாவட்டம்  நத்தம் அருகே லிங்கவாடி ஊராட்சியில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு  சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு மேற்பார்வையாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.ஊராட்சி செயலர் அன்புச்செல்வம் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் சுகாதார ஆய்வாளர் செல்வம், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம செவிலியர்கள் உள்ளிட்ட மகளிர் குழுவினர், கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில் பிளாஸ்டிக் ஒழிப்பு, மழை வளம் பெருக மரக்கன்றுகள் நடுவது, சுகாதாரத்தை பேணிக் காப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் விளக்கி கூறப்பட்டது. இதைபோலவே வேலம்பட்டி ஊராட்சி ராக்காச்சிபுரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மணிமுத்து தலைமையில் பற்றாளர் அசோக்குமார்,ஊராட்சி செயலர் செந்தில்குமரன் ஆகியோர் முன்னிலையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.ரெட்டியபட்டி ஊராட்சியில் உள்ள வத்திபட்டியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. உதவியாளர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் மணி,  முன்னிலை வகித்தார். மேலும் பண்ணுவார்பட்டி ஊராட்சியில் உதவியாளர் கிப்டன் தலைமையில் ஊராட்சி செயலர் கருப்பையா முன்னிலையிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.. இதைப்போலவே சாத்தாம்பாடி ஊராட்சி கோமனாம்பட்டியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசராகவன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் ஊராட்சி செயலர்  பொன்னன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புன்னப்பட்டி ஊராட்சியில் உள்ள உலுப்பகுடியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் தலைமையில் ஊராட்சி செயலர் சின்னச்சாமி முன்னிலையிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. கோட்டையூர் ஊராட்சியில் பற்றாளர் அமிர்தவள்ளி தலைமையிலும், ஊராட்சி செயலர் செந்தில்வேல் முன்னிலையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.சிறுகுடி ஊராட்சி குப்பப்பட்டியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுசுயா தலைமையில் ஊராட்சி செயலர் ராஜேஸ்வரி முன்னிலையிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. செந்துறை ஊராட்சியில் பற்றாளர் மூக்கம்மாள் தலைமையில் ஊராட்சி செயலர் கருப்பையா முன்னிலையிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து