முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் வங்கிகள் ஒருங்கிணைந்து சேவை கரம் நீட்டும் முகாம்

வியாழக்கிழமை, 3 அக்டோபர் 2019      ராமநாதபுரம்
Image Unavailable

   ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் வங்கிகள் ஒருங்கிணைந்து சேவை கரம் நீட்டும் முகாம் கலெக்டர் வ:Pரராகவராவ் தலைமையில் நடந்தது.
     ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைப்புடன் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பாக பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொதுத்துறை, தனியார் மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த வங்கிகள் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட சேவை கரம் நீட்டும் முகாமில் கலெக்டர் கொ.வீர ராகவ ராவ் 700 பயனாளிகளுக்கு ரூ.13 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- பிரதமரின் உத்தரவின்படி இந்திய அளவில் சிறப்பு கவனம் செலுத்தக்கூடிய மாவட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 117 மாவட்டங்களில் ராமநாதபுரம் மாவட்டமும் ஒன்றாகும். அதனடிப்படையில் கல்வி வளர்ச்சி, வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் திறன் மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்பாடு, பொது சுகாதாரம் உள்ளிட்ட 5 காரணிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்களின் வளமான வாழ்விற்கு பொருளாதாரம் மிகவும் இன்றியமையாததாகும். அதனடிப்படையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட முன்னோடி வங்கி ஒருங்கிணைப்பில் பொதுத்துறை, தனியார் துறை மற்றும் கூட்டுறவுத் துறை சார்ந்த 25 வங்கிகள் பங்கேற்கும் வகையில் மாபெரும் சேவை கரம் நீட்டும் முகாம் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், விவசாயக் கடன், சுய உதவிக்குழு கடன் மற்றும் முத்ரா கடன் போன்ற பல்வேறு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன. இம்முகாமில் ஏறத்தாழ 700 பயனாளிகளுக்கு ரூ.13 கோடி மதிப்பிலான கடன் உதவிகள் வழங்கப்படுகின்றன.
இதுதவிர, இம்முகாமில் புதிய வங்கிக் கணக்கு துவங்குதல், ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு போன்ற பல்வேறு திட்டங்களுக்கு பதிவு செய்தல், கடனுதவி மற்றும் பல்வேறு வைப்புத்தொகை திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தல் போன்ற பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. மத்திய மாநில அரசுகள் சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல சிறு, குறு வியாபாரிகள் பயன்பெறும் வகையில் முத்ரா கடன் உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முத்ரா கடனுதவி திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பாண்டில் ரூ.350 கோடி மதிப்பில் கடன் உதவிகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இது தவிர மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவியாக வழங்கிட  ரூ.350 கோடி அளவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஏறத்தாழ 2 கோடி அளவில் பனை மரங்கள் உள்ளன. அதன்படி பனை மரம் சார்ந்த சிறு தொழில்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஏறத்தாழ ரூ.50 லட்சம் மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மீனவர்கள் பயன்பெறும் வகையில் மீன்பிடி சார்ந்த சிறு தொழில்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகின்றன என பேசினார்.
இவ்விழாவில், மாவட்ட கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி முகமை) மா.பிரதீப் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பொது மேலாளர் கேதார்நாத், தூத்துக்குடி முதன்மை மண்டல மேலாளர் விஸ்வநாதன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் கோ.குருநாதன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் .மாரியம்மாள், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உதவி பொது மேலாளர் பால்ராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தன் உட்பட பல்வேறு வங்கிகளைச் சார்ந்த மேலாளர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து