உலக மகளிர் குத்துச்சண்டை: இந்திய வீராங்கனை அபாரம்

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      விளையாட்டு
Boxing Indian shuttler 2019 10 06

உலன்உடே, : உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி 75 கிலோ பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வீட்டி போரா வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
ரஷ்யாவின் உலன்உடே நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் இந்தியாவின் ஜமுனா போரோ முதல் வெற்றியை ஈட்டியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் 75

கிலோ பிரிவில் ஸ்வீட்டி போரா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் மங்கோலியாவின் முங்பத் மாரிஜாக்ரலை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஸ்வீட்டி போரா கடந்த 2014 உலக சாம்பியன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவா்.57 கிலோ பிரிவில் நீரஜ் போகட் தோல்வியடைந்து வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து