முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமண்டலநதி ஆற்றுபுன்செய் நிலைநிறுத்தும் கலாச்சார விழா: முன்னாள் எம்.பி.,என்.எஸ்.வி.சித்தன் பங்கேற்று சிறப்புரை:

ஞாயிற்றுக்கிழமை, 6 அக்டோபர் 2019      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நடைபெற்ற கமண்டலநதி ஆற்றுபுன்செய் நிலைநிறுத்தும் கலாச்சார விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
தென் மாவட்டங்களின் சிறுதானிய களஞ்சியம் என்று அழைக்கப்படும் சிவரக்கோட்டை கிராமத்தை வளப்படுத்திடும் கமண்டலநதியை சேவையை கொண்டாடிடும் வகையில் கமண்டலநதி ஆற்றுப்புன்செய் நிலைநிறுத்தும் கலாச்சார விழா திருமங்கலம் நகர் கோட்டை குருசாமி திருமண மஹாலில் நடைபெற்றது.இவ் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன்,கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன்,தமிழ்நாடு இறையியல் கல்லூரி முதல்வர் டேவிட்ராஜேந்திரன், முன்னாள் முதல்வர் மோகன்லார்பீர்,சென்னை பேராயம் ஆயர் ஜான்ஜெயகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிவரக்கோட்டை மற்றும் கமண்டலநதியினால் பயனடையும் கிரைமங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்;ட இந்த கலாச்சார விழாவில் முன்னாள் எம்.பி.,என்.எஸ்.வி.சித்தன் பேசுகையில்: மண்ணை மக்கள் நேசிக்க வேண்டும்.விவசாயம் செய்திட வேண்டும்.மேலும் விவசாயத்தை விரிவாக்கம் செய்திட நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.நாடு நன்றாக இருக்க வேண்டும்.மக்கள் நன்றாக இருக்க வேண்டும்.வருங்கால சந்ததியினருக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதை முடிவு செய்திட வேண்டும்.காமராஜர் போன்றோர் நமக்கு நன்மைகள் பல செய்துவிட்டு சென்றுள்ளனர்.அடுத்த தலைமுறைக்கு நாம் என்ன செய்யப் போகிறோம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் நேர்மையாக நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.நாடு இப்படியே சென்று விடாது.லஞ்சத்திலும் கமிஷனிலும் சென்றுவிடாத ஒரு காலம் விரைவில் வந்திடும்.இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சிவரக்கோட்டை அ.ஆதிமூலம்(டேவிட்),அ.தண்டி மற்றும் சிவரக்கோட்டை பொதுமக்கள் சிறப்புடன் செய்திருந்தனர்.முன்னதாக இந்த விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிச்சமிட்டு காட்டிடும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து